ADDED : மார் 30, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: மடுகரையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கோபால் இவரது மகன் பிரசாந்த் 33, இவர் கடந்த 28 ம் தேதி மதியம் 12.00 மணிக்கு புதுச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 14வயது சிறுமியிடம், நான் ஒரு டாக்டர் என அறிமுகமாகி, உண்னை பரிசோதனை செய்ய வேண்டும் கூறி, அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
