/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா கடத்திய வாலிபர் கைது 4.260 கிலோ பறிமுதல்
/
கஞ்சா கடத்திய வாலிபர் கைது 4.260 கிலோ பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 11:49 PM
புதுச்சேரி : கோரிமேடு பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 4.260 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
டி.நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு கோரிமேடு அரசு பல் மருத்துவ கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவ்வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்து பைக்கை சோதனை செய்தனர்.
அதில், ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4 கிலோ 260 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கோரிமேட்டை சேர்ந்த வேல் முருகன் மகன் தனுஷ் குமார், 20; என்பதும், அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவர், கோரிமேடு பகுதி யில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய ஒடிசாவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், பைக், மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.