தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருடிய வாலிபர் கைது  இரண்டு பைக்குகள் பறிமுதல்

பைக் திருடிய வாலிபர் கைது  இரண்டு பைக்குகள் பறிமுதல்

பைக் திருடிய வாலிபர் கைது  இரண்டு பைக்குகள் பறிமுதல்


ADDED : டிச 13, 2024 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை அருகே பைக் திருட்டு வழக்கில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமர வேல் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நேற்று 12ம் தேதி அதிகாலை 1;00 மணியளவில் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே பைக்கில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு நடுத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் செந்தமிழ் செல்வன் 26; என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதகடிப்பட்டு ரீகன் ஒயின்ஸ் அருகில் திருடியதையும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பைக் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தமிழ்செல்வனை கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்து புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us