ADDED : செப் 13, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால், திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அவ்வழியாக பைக்கை தள்ளி சென்ற நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர், நாகப்பட்டினம், ஓரத்துாரை சேர்ந்த ஆகாஷ், 19, என்பதும், பைக்கை திருடி வந்ததும் தெரிந்தது.
அவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.