ADDED : செப் 19, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால், கொத்தலம்பே ட்டை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் வல தெரு எஸ்.எஸ்.நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒ ருவர் பைக் ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தார். சந்தேகமடைந்த ராஜசேகரன் விசாரித்தபோது, அவர், பைக்கை விட்டு விட்டு தப்பியோட முயன்றார் .
அவரை, பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். விசாரணையில், அவர், மயிலாடுதுறை, மணவெளி தெரு ஹரிஷ், 19, என்பதும் பைக் மற்றும் பேட்டரியை திருடி வந்தது தெரிந்தது. நகர போலீசார் வழக்குப் பதிந்து ஹரிைஷ கைது செய்தனர்.
