/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கம்பெனியில் காப்பர் திருடிய வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
/
கம்பெனியில் காப்பர் திருடிய வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
கம்பெனியில் காப்பர் திருடிய வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
கம்பெனியில் காப்பர் திருடிய வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
ADDED : டிச 20, 2024 04:03 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தனியார் கம்பெனியில் காப்பர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் பகுதியில் மோட்டர் செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் கடந்த 17ம் தேதி இரவு 250 கிலோ காப்பர் திருடப்பட்டுள்ளதாக, செக்யூரிட்டி தட்சிணாமூர்த்தி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், உதவி சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கிரைம் போலீசார் காப்பர் திருடியவர்கள் குறித்து விசாரித்தனர்.
காப்பர் திருடியது ஏரிப்பாக்கம் புதுக்காலனியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் சத்தியமூர்த்தி, 25; புதுச்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜ், 29, கடலுார் பிரசாந்த், 26, ஆகியோர் என, தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து, அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 238 கிலோ காப்பர் பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசாரை எஸ்.பி., வம்சித்த ரெட்டி பாராட்டினார்.