/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் அதிரடி கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் அதிரடி கைது
ADDED : டிச 06, 2024 06:40 AM

வில்லியனுார் : மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார், பெரிய பேட் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, 75, என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம், அன்னை லுார்து மாதா கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் அவர், காதில் இருந்த நகையை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றார். அதில், அவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த திலீப், 22, என்பவர் விஜயலட்சுமியிடம் நகையை பறித்தது தெரியவந்தது.
அரியாங்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், வில்லியனுார் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இவர், மீது வில்லியனுார் போலீசில், நகை பறிப்பு, வழிபறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. திலீப்பை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.