/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் விடுதியில் 'லேப் டாப்' திருடிய வாலிபர் கைது
/
மாணவர் விடுதியில் 'லேப் டாப்' திருடிய வாலிபர் கைது
மாணவர் விடுதியில் 'லேப் டாப்' திருடிய வாலிபர் கைது
மாணவர் விடுதியில் 'லேப் டாப்' திருடிய வாலிபர் கைது
ADDED : டிச 26, 2024 05:59 AM

புதுச்சேரி: காலாப்பட்டு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் 4 லேப் டாப் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் விடுதியில், தங்கியுள்ள 4 மாணவர்களின் விலை உயர்ந்த 4 'லேப் டாப்'கள் கடந்த 17ம் தேதி திருடு போனது.
இதுகுறித்து பல்கலைக்கழக செக்யூரிட்டி மகேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, பல்கலை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
லேப் டாப்களை திருடியது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், 28, என, தெரிய வந்தது. இதையடுத்து, கிழக்கு எஸ்.பி., இஷா சிங் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கியிருந்த தமிழ்செல்வனை கைது செய்து, அவரிடம் இருந்து 4 லேப் டாப்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழ்செல்வன், மாணவர் விடுதிகளில் லேப் டாப்களைமட்டும் குறிவைத்து திருடுவதை வழக்கமாக கொண்டவர் என்பதும், இவர் மீது பல்வேறு மாநிலங்களில் லேப் டாப் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

