/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 22, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பூமியான்பேட்டை, சந்திப்பில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொது மக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர், லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த விஜயன், 29; என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

