/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 25, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது சாலைத்தெருவில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் உழவர்கரை, சாலைத் தெருவை சேர்ந்த அன்பரசு, 21; என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.

