ADDED : நவ 25, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,24) பத்துகண்ணு பகுதியில் ரோந்து சென்றனர்.
செல்லிப்பட்டு சாலையில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொது மக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்த அந்த வாலிபர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர் கண்டமங்கலம் சின்ன அம்மணங்குப்பம் செல்வகுமார், 26, என்பதும், அவர் அப்பகுதியில் சென்ற பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர்.
