/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
மாணவிக்கு டார்ச்சர் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : பிப் 04, 2026 05:09 AM
அரியாங்குப்பம்: பள்ளி மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி, டார்ச்சர் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் சாலை காக்கையாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், 27; இவர், புதுச்சேரியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை, பின் தொடர்ந்து, காதலிக்குமாறு டார்ச்சர் செய்துவந்தார். இது குறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறினார். அதையடுத்து, மாணவின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து , பிரசாந்தை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

