ADDED : டிச 20, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பெண்களை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது கடலுார் மாவட்டம், அகாடவள்ளி தெற்கு வீதியைச் சேர்ந்த சுப்பரமணி மகன் புஷ்பராஜ், 22, என்பவர் அதிகமாக குடித்து விட்டு மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு, அங்கு பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டார்.
அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.