ADDED : ஜன 13, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த பிரபு, 33, என்பவர் மடுகரை பாதையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.