ADDED : மார் 05, 2026 04:00 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கல்லுாரி பெண்ணை பலத்காரம் செய்த வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர் கிரிஸ்வின், 20; கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருடன் கல்லுாரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதற்கிடையில் அப்பெண்ணை அவர் பாலியல் பலத்காரம் செய்துள்ளார்.
இது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்து, பெண்ணின் பெற்றோர்கள் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து கிரிஸ்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
