நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீசார் கடந்த 30ம் தேதி இரவு 7:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தவளக்குப்பம்-கல்மண்டபம் மெயின் ரோட்டில் அரசு பார் எதிரில் வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் மடுகரை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் 34, என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.