ADDED : மே 21, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் பில்லுார் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் 35, என்பவர், மது போதையில் கரியமாணிக்கம் கான்பேட் பார் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டும், இடையூறு செய்து கொண்டிருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
