ADDED : மே 21, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் 29, என்பவர், மது போதையில் உறுவையாறு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டும், இடையூறு செய்து கொண்டிருந்ததால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
