ADDED : ஆக 12, 2025 02:55 AM
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த கீர்த்திவாசன், 34; பிளம்பர். இவர் அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த பெண் தற்போது கீர்த்திவாசனின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளனர். மேலும், பெற்றோர் பார்த்த வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள நிச்சயமாகியுள்ளார்.
இதையறிந்த கீர்த்திவாசன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் கீர்த்திவாசனை அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த பெண்ணிற்கு காதலிக்கும் போது பல லட்சம் செலவு செய்துள்ளதால், அதனை பெற்று தரும்படி கூறியுள்ளார். அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் ஸ்டேஷன் எதிரே திடீரென தான் கையில் மறைத்து வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயன்றார். உடனடியாக அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.