ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர் மயங்கி விழுந்து பலி
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஆக 02, 2026 03:35 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஆரணி இளைஞர், 1.6 கி.மீ., ஓட்டத்தில் ஓடியபோது மயங்கி விழுந்து உயிரிழிந்தார்.
இந்திய ராணுவத்திற்கு, அக்னிவீர் திட்டத்தின் கீழ், ஆள்சேர்ப்பு முகாம், புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க, ஏராளமான தமிழக இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
நேற்று முதலில் 1.6 கி.மீ., ஓட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி, கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த கோகுல், 18, என்ற இளைஞர் பங்கேற்று ஓடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஓதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
