/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் குதித்து வாலிபர் தற்கொலை
/
கடலில் குதித்து வாலிபர் தற்கொலை
ADDED : ஜன 16, 2025 05:51 AM
புதுச்சேரி: வேலை கிடைக்காத விரக்தியில் புதுச்சேரி வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை, டி.வி.நகர், புதுப்பாளையம் நகரைச் சேர்ந்தவர் துரை கணேசன். இவரது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மகன் தரணிதரன், 33; டி.எம்.எல்.டி., படித்து வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காததால் மன வருத்தில் இருந்து வந்தார். பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பெற்றோர் எழுந்து பார்த்தபோது, தரணிதரன் அவரது அறையில் இல்லை. அருகில் உள்ள வீடுகள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) பின்புறம் தரணிதரன் உடல் கரை ஒதுங்கி இருந்தது.
விசாரணையில் சரியான வேலை கிடைக்காததாலும், திருமணமாகாததால் ஏற்பட்ட விரத்தியில் கடலில் குதித்து தரணிதரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஒதியஞ்சாலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

