/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர் காங்., 65ம் ஆண்டு துவக்க நாள் விழா
/
இளைஞர் காங்., 65ம் ஆண்டு துவக்க நாள் விழா
ADDED : ஆக 11, 2025 06:55 AM

புதுச்சேரி : இளைஞர் காங்., 65ம் ஆண்டு துவக்க நாள் விழா, புதுச்சேரி காங்., கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில், புதுச்சேரி இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரதேச காங்., கமிட்டி தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கட்சி கொடியேற்றினர்.
தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டு , இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்சியில்,ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பொதுச் செயலாளர்கள் திருமுருகன், தனுசு, செயலாளர்கள் செந்தில், கோபி, மண்ணாடிபட்டு ரகுபதி, இளைஞர் காங்., நிர்வாகிகள் கோவலன், சத்திய நாராயணன், பிரதீப், அய்யப்பன் (எ) அஜித், மனோஜ்குமார், வேல்முருகன், இனியன், மணிகண்டன், சச்சு, தமிழரசன், ஜனா, ஜெய், சஞ்சய், விக்னேஷ், ஹரிஷ், அபிலாஷ், தினேஷ் மற்றும் இளைஞர்கள் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

