ADDED : செப் 23, 2024 04:23 AM
புதுச்சேரி, : புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற இளைஞர் காங்., நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நடந்த இலக்கிய விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பங்கேற்று, மாலை கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு காரில் புறப்பட்டார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரி தலைமை செயலகம் அருகே இளைஞர் காங்., துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி காட்ட தாயராக இருந்தனர்.
தகவலறிந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கிருந்த நிர்வாகிகள் 9 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.