/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர் காங்., தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
/
இளைஞர் காங்., தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
ADDED : ஆக 17, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்., நிர்வாகிகள், மாநில, மாவட்ட, தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் கொக்கு பார்க் சந்திப்பில் துவங்கி ஜீவா காலனி வழியாக லாஸ்பேட்டை உழவர் சந்தையுடன் முடிவடைந்தது.