ADDED : மார் 16, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார், 28; திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை அவரது நண்பரான அரியாங்குப்பம் தினேஷ் 26 என்பவருடன் பைக்கில் மடுகரை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் வந்த டிரெய்லருடன் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. காயமடைந்த சரவணக்குமார், தினேஷ் ஆகியோர் மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து சரவணக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.