தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி

ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி


UPDATED : மே 01, 2026 08:26 PM

ADDED : மே 01, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 08:26 PM ADDED : மே 01, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: ஆட்டோ மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 41; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது ஆட்டோவில் வேப்பூரிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

நேற்று காலை 8:00 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அவ்வழியே சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், சுரேஷ், அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us