/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு வெட்டு 5 பேருக்கு வலை
/
வாலிபருக்கு வெட்டு 5 பேருக்கு வலை
ADDED : அக் 14, 2025 05:47 AM
அரியாங்குப்பம் :வாலிபரை கத்தியால் வெட்டிய கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
தவளக்குப்பத்தை சேர்ந்தவர் மணிவேலன், 21; இவர்,அபிேஷகப்பாக்கம் ஏரிக்கரையில் தனது நண்பர்களுடன் நேற்று மாலை மது குடித்து கொண்டிருந்தனர். அதே இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து, மணிவேலனை, கத்தியால் சரமாறியாக வெட்டி வீட்டு, தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்ததில், மணிவேலனுக்கும், வெட்டிய கும்பலுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. மேலும், தப்பி சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.