/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று பைக்குகள் மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
/
மூன்று பைக்குகள் மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
மூன்று பைக்குகள் மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
மூன்று பைக்குகள் மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
ADDED : ஜன 29, 2025 05:07 AM
சின்னசேலம் : சின்னசேலம் அருகே அடுத்தடுத்து மூன்று பைக்குகள் மோதியதில் வாலிபர் இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகன் விஜய்,35; இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சின்னசேலம் நோக்கி தனது பைக்கில் சென்றார்.
அப்போது பின்னால் சின்னசேலம் அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அரவிந்த்,23; குருநாதன்,20; ஆகியோர் வந்த பைக், விஜய் பைக் மீது மோதியது. அதில், நிலை தடுமாறிய விஜய் பைக், முன்னால் சென்ற அக்கராயபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் பைக் மீது மோதியது.
அடுத்தடுத்து பைக்குகள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த விஜய், ரமேஷ், அரவிந்த், குருநாதன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அரவிந்த் நேற்று காலை இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.