தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

 இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி சபாநாயகர் துவக்கி வைப்பு

 இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி சபாநாயகர் துவக்கி வைப்பு


ADDED : டிச 06, 2025 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றம் என்பது மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி, காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.

சிறப்பு விருந்தினர் சபாநாயகர் செல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பூஜா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கந்தவேல் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான இளைஞர் நாடாளுமன்றம் நோடல் ஆபீசர் தாமோதரன், ஒருங்கிணைப்புச் செயலாளர் சுபஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us