நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர் 7 வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் 27, கூலித்தொழிலாளி. இவருடைய தந்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்த பிரகாஷ் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். நேற்று அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பிரகாஷ், திடீரென அவரது அறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் தாயின் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.