நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பைக் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் குளத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுபாஷ், 23; தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், தனது தாய் லதாவிடம் பைக் வாங்க பணம் கேட் டார். அவர் தர மறுக்கவே, அதிகமாக குடித்து விட்டு, வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.