ADDED : மே 21, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பொண்ணுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புருேஷாத்தம்மன் 31, கார் டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவருக்கு, கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் இடது கை தோள்பட்டை அடிப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2.50 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த புருேஷாத்தம்மன் வீட்டு வாராண்டாவில் இருந்த மின்விசிறியில் நைலான் கயிற்றால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
