/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிம்ஸ் மருத்துவமனையில் இளைஞர்களுக்கான பயிற்சி மாநாடு
/
பிம்ஸ் மருத்துவமனையில் இளைஞர்களுக்கான பயிற்சி மாநாடு
பிம்ஸ் மருத்துவமனையில் இளைஞர்களுக்கான பயிற்சி மாநாடு
பிம்ஸ் மருத்துவமனையில் இளைஞர்களுக்கான பயிற்சி மாநாடு
ADDED : பிப் 12, 2024 06:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனை மருத்துவத்துறை, சென்னை மறை மாவட்ட ஆர்தோடக்ஸ் சிரியன் திருச்சபை சார்பில், இளைஞர்களுக்கான நம்பிக்கை, நட்பு, கூட்டுறவு மற்றும் வழிகாட்டல் - கடவுளின் மாணவர்கள் கூடுகின்றனர் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி மாநாடு நடந்தது.
இம்மாநாட்டினை சென்னை மறை மாவட்ட மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் திருச்சபையின் முதன்மை ஆயர் கீவர்கீஸ் மார் ப்ளோசெனாஸ் துவக்கி வைத்தார். பங்கு தந்தை ஜித்தன் ஜாய் வரவேற்றார். பங்குதந்தைகள் பிலீப் குருவில்லா,விவேக் வர்கீஸ், பொது செயலர், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் பொருளாளர் ஜான் தாமஸ், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் உறுப்பினர்கள் சந்தியா செரியன் லிசாஜோசப் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் பங்குதந்தை அபி சாக்கோ, டாக்டர் ரேணு, மோகன்டேனியல் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பிம்ஸ் மருத்துவமனை பங்கு தந்தை ஜோபி ஜார்ஜ் கூறுகையில், 'இன்றைய இளைஞர்கள் ஆன்மிக மற்றும் தனிநபர் வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றம் குறித்து தெரிந்து கொள்ளுவதற்காக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது' என்றார்.
மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஷெரில் ஜாய் நன்றி கூறினார்.