/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் முதல்வரை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்
/
முன்னாள் முதல்வரை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்
ADDED : டிச 03, 2024 06:15 AM
பாகூர்: முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலு தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வரை, போதை இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாகூரில் மாரி நகர் சந்திப்பில் சாலையின் குறுக்கே பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில், பாகூர் துாக்குபாலம் சந்திப்பில் கயிறு கட்டி அவ்வழியாக வாகனங்களில் செல்வோரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலுவின் தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காரை தடுத்து நிறுத்தி, ஊருக்குள் தண்ணீர் ஓடுவதை பாருங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டு கொள்ளாத நிலையில், நாராயணசாமியும், வைத்தியநாதன் எம்.எல்.ஏ.,வும் காரில் இருந்து இறங்கி வெள்ளத்தில் நடந்து சென்றனர்.