sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

/

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்

இந்தியாவுக்கு 24 பதக்கம்: ஜப்பான் பாரா பாட்மின்டனில்


ADDED : அக் 27, 2024 10:52 PM

Google News

ADDED : அக் 27, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ: ஜப்பான் பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட 24 பதக்கம் கிடைத்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு. 5) பைனலில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், ஜப்பானின் மாமிகோ டெயோடா மோதினர். அபாரமாக ஆடிய மணிஷா 21-12, 12-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆண்கள் ஒற்றையர் (எஸ்.எல். 4) பைனலில் இந்தியாவின் சுகந்த் கடம், தருண் மோதினர். இதில் சுகந்த் கடம் 21-12, 21-10 என வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் (எஸ்.எச். 6) பைனலில் இந்தியாவின் சிவராஜன் சோலமலை 21-16, 21-16 என ஹாங்காங்கின் சுன் யிம் வோங்கை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் உமேஷ் விக்ரம் குமார், சூர்ய காந்த் யாதவ் ஜோடி 21-5, 20-22, 21-16 என சகநாட்டை சேர்ந்த சுகந்த் கடம், தினேஷ் ராஜய்யா ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.

இத்தொடரில் 6 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என, மொத்தம் 24 பதக்கம் வென்றது இந்தியா.






      Dinamalar
      Follow us