/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
இந்தியாவுக்கு 4 தங்கம்: சீன 'பாரா' பாட்மின்டனில்
/
இந்தியாவுக்கு 4 தங்கம்: சீன 'பாரா' பாட்மின்டனில்
ADDED : செப் 21, 2025 11:00 PM

பீஜிங்: சீன பாரா பாட்மின்டனில் இந்தியாவுக்கு 4 தங்கம் உட்பட 12 பதக்கம் கிடைத்தது.
சீனாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச 'பாரா' பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச். 6' பிரிவு பைனலில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஷவாங்பாவோ லீயை வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 15-21, 21-19, 21-16 என இந்தோனேஷியாவின் முஹ் அல் இம்ரானை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றார். 18 மாத தடைக்கு பின், மீண்டும் களமிறங்கிய பிரமோத் பகத் 37, தங்கம் வென்று சாதித்தார்.
ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல். 3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவக்குமார் ஜோடி 21-18, 20-22, 21-18 என சகநாட்டை சேர்ந்த பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள் இரட்டையர் 'எஸ்.யு.5' பிரிவு பைனலில் இந்தியாவின் ருத்திக் ரகுபதி, மலேசியாவின் சியா லீக் ஹு ஜோடி வெற்றி பெற்றது.
மற்ற பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் சுகந்த் கடம் (எஸ்.எல். 4), கிருஷ்ணா நாகர் (எஸ்.எச். 6) வெள்ளி வென்றனர்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என, 12 பதக்கம் கிடைத்தது.