UPDATED : ஆக 08, 2026 09:41 PM
ADDED : ஆக 08, 2026 09:05 PM

நம்புரு: கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை அஷ்மிதா முன்னேறினார்.
தென் கொரியாவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக் ஷிதா ஸ்ரீ மோதினர். முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றிய அஷ்மிதா, இரண்டாவது செட்டை 16-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட அஷ்மிதா 21-13 என வென்றார்.
மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அஷ்மிதா 21-13, 16-211, 12-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'பி.டபிள்யு.எப்., வேர்ல்டு டூர்' பைனலுக்குள் முதல் முறையாக நுழைந்தார்.
பைனலில், உலகின் 'நம்பர்-50' அஷ்மிதா, 35வது இடத்தில் உள்ள சீனாவின் ஹான் கியான்சி மோதுகின்றனர்.
