தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ பாட்மின்டன்: இந்தியா 'வெண்கலம்'

பாட்மின்டன்: இந்தியா 'வெண்கலம்'

பாட்மின்டன்: இந்தியா 'வெண்கலம்'


ADDED : செப் 23, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு ஆண்கள் அணிகளுக்கான பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் ஒற்றையர் போட்டியில் லக்சயா சென் 16-21, 18-21 என யுகி ஷியிடம் தோல்வியடைந்தார்.

* ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், ஷிராக் ஜோடி, வெய்கெங், சாங் வாங் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-11, 22-20 என வெற்றி பெற, ஸ்கோர் 1-1 என ஆனது.

* மூன்றாவது போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 13-21 என ஷிபெங்கிடம் வீழ்ந்தார். இந்தியா 1-2 என பின்தங்கியது.

* மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்), அர்ஜுன் ஜோடி 16-21, 21-17, 9-21 என்ற செட் கணக்கில் டிங் ஜி, லியு இ ஜோடியிடம் போராடி தோற்றது.

முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

தமிழக வீரருக்கு ரூ. 30 லட்சம்

முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில்,' ஆசிய விளையாட்டு பாட்மின்டனில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் அணிக்கும், இதில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் ஹரிஹரனுக்கும் வாழ்த்துகள். ஹரிஹரன் திறமையை பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் சாதனை, தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது,' என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us