/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் வெற்றி
/
ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் வெற்றி
ADDED : ஜூன் 12, 2024 10:20 PM

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், சமீர் வர்மா, ஆகர்ஷி வெற்றி பெற்றனர்.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய், பிரேசிலின் யகோர் கோயல்ஹோ மோதினர். இதில் பிரனாய் 21-10, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா 21-10, 21-10 என ஆஸ்திரேலியாவின் ரிக்கி டாங்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-17, 21-10 என கனடாவின் ஜியோடங் ஷெங்கை தோற்கடித்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், ரவி, சங்கர் முத்துசாமி, ரகு மாரிச்சாமி, அபிஷேக் தோல்வியடைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், உக்ரைனின் போலினா புஹ்ரோவா மோதினர். இதில் ஆகர்ஷி 21-14, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனுபமா 21-14, 23-21 என மலேசியாவின் வாங் லிங் சிங்யை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியாவின் மாளவிகா 21-10, 21-8 என சகவீராங்கனை கெயுராவை வென்றார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத், சிக்கி ரெட்டி ஜோடி 21-17, 21-19 என மலேசியாவின் வாங் டியன் சி, லிம் சிவ் சியன் ஜோடியை வீழ்த்தியது.