உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 25, 2024 11:00 PM

அ நிறம் | அளவு
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பைனலுக்கு சிந்து முன்னேறினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். முதல் செட்டை 13-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 21-12 என வென்றார்.
ஒரு மணி நேரம், 28 நிமிடம் நீடித்த போட்டியில் 13-21, 21-12, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிந்து பைனலுக்குள் நுழைந்தார். இது, புசானனுக்கு எதிராக சிந்து பெற்ற 18வது வெற்றி.
