/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
வலிமையாக மீண்டு வருவோம் * சாத்விக்சாய்ராஜ் நம்பிக்கை
/
வலிமையாக மீண்டு வருவோம் * சாத்விக்சாய்ராஜ் நம்பிக்கை
வலிமையாக மீண்டு வருவோம் * சாத்விக்சாய்ராஜ் நம்பிக்கை
வலிமையாக மீண்டு வருவோம் * சாத்விக்சாய்ராஜ் நம்பிக்கை
ADDED : மே 03, 2024 10:55 PM

புதுடில்லி: '' தாமஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதில் இருந்து வலிமையாக மீண்டு வருவோம்,'' என சாத்விக்சாய்ராஜ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தாமஸ் கோப்பை (ஆண்கள்), உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கியது. லீக் சுற்றில் 3ல் 2ல் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இதில் சீனாவிடம் 1-3 என தோற்று வெளியேறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ஏமாற்றியது. இத்தொடரில் பங்கேற்ற 4 போட்டியில் 2ல் தான் வென்றது.
லீக் சுற்றில் இந்தோனேஷியா, அடுத்து காலிறுதி என தொடர்ந்து இரு போட்டிகளில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோற்றது. இதுகுறித்து சாத்விக்சாய்ராஜ் கூறுகையில்,'' தாமஸ் கோப்பை தொடரில் எங்களது திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை என்றாலும், முடிந்தவரை போராடினோம். இருப்பினும் எதிரணியை விட சிறப்பாக விளையாடினால் மட்டுமே போட்டியில் வெற்றி பெற முடியும். தற்போது கிடைத்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, வலிமையான முறையில் மீண்டு வருவோம்,'' என்றார்.