தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: சிந்து அபாரம்

பாட்மின்டன்: சிந்து அபாரம்

பாட்மின்டன்: சிந்து அபாரம்


ADDED : மார் 12, 2024 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 10:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.

இங்கிலாந்தில் பாரம்பரியமான 'ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப்' தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-11' வீராங்கனை, இந்தியாவின் சிந்து, 26 வது இடத்திலுள்ள ஜெர்மனியின் யுவோன்னே லியை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-10 என கைப்பற்றினார். இந்நிலையில் யுவோன்னே காயம் காரணமாக விலகிக் கொள்ள, சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி, தென் கொரியாவின் பாய் யு போவுடன் மோதினார். இதில் ஆகர்ஷி 16-21, 11-21 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-7' வீரர், இந்தியாவின் பிரனாய், முதல் சுற்றில் தென் கொரியாவின் சு இ யங்கை சந்தித்தார். சமீபத்திய பிரெஞ்ச் ஓபன் தொடர் முதல் சுற்றில் தோற்ற பிரனாய், நேற்று முதல் செட்டை 21-14 என எளிதாக கைப்பற்றினார். பின் ஏமாற்றிய இவர், அடுத்த இரு செட்டையும் கோட்டை விட்டார். முடிவில் பிரனாய் 21-14, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us