ADDED : மே 20, 2024 10:38 PM

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில் இந்தியாவின் சிந்து களமிறங்குகிறார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து 28. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் (2016ல் வெள்ளி, 2021ல் வெண்கலம்) வென்ற ஒரே இந்திய வீராங்கனை. 2022 காமன்வெல்த்தில் தங்கம் வென்ற பின், முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டு வந்தார்.
கடைசியாக பங்கேற்ற 6 போட்டியில் 2ல் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக 2022 சிங்கப்பூர் தொடரில் கோப்பை வென்றார். சிறிய ஓய்வுக்குப் பின் இன்று மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கிறார்.
கரோலினா மரின் (ஸ்பெயின்), யமாகுச்சி (ஜப்பான்) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இதில் பங்கேற்கவில்லை. அடுத்த தலைமுறை இளம் வீராங்கனைகள் சவாலை எதிர்கொண்டு, சிந்து மீண்டு வர வேண்டும். முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மரை சந்திக்க உள்ளார்.
தவிர அஷ்மிதா, ஆகர்ஷி, மாளவிகாவுடன், இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் ஒற்றையரில் களமிறங்குகிறார். தாய்லாந்து ஓபன் சாம்பியன் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி இத்தொடரில் பங்கேற்கவில்லை.
கலப்பு இரட்டையரில் இந்திய தம்பதி சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி, சதிஷ் குமார் கருணாகரன்-ஆத்யா ஜோடி திறமை வெளிப்படுத்தலாம்.
