/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: அரையிறுதியில் தன்வி சர்மா
/
பாட்மின்டன்: அரையிறுதியில் தன்வி சர்மா
ADDED : நவ 28, 2025 08:58 PM

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், தன்வி சர்மா, உன்னதி ஹூடா முன்னேறினர்.
லக்னோவில், சையது மோடி சர்வதேச 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத் மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 11-4 என முன்னிலை வகித்த போது பிரியான்ஷு காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 21-18, 21-13 என சகவீரர் மன்ராஜ் சிங்கை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என சகவீராங்கனை ரக் ஷிதா ஸ்ரீயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தன்வி சர்மா 21-13, 21-19 என ஹாங்காங்கின் லோ சின் யான் ஹேப்பியை வீழ்த்தினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரிசா ஜோடி 21-15, 21-16 என துருக்கியின் பெங்கிசு, நாஸ்லிகன் ஜோடியை வீழ்த்தியது.

