ADDED : மே 14, 2024 10:46 PM

பாங்காங்: தாய்லாந்து பாட்மின்டனின் இரண்டாவது சுற்றுக்கு சதிஷ்குமார், ஆத்யா ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா வரியாத் ஜோடி, தாய்லாந்தின் மீசாய், பங்பா ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சுமீத் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி 12-21, 16-21 என இந்தோனேஷியாவின் ரினோவ், பிதா மென்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆண்கள் ஒற்றையருக்கான தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் மெய்ரபா லுவாங், சக வீரர் ஷாஷ்வத் தலாலை 15-21, 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். இதில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் பிரனாயுடன் இன்று மோதுகிறார்.
தகுதிச்சுற்றில் முதல் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள் ஆயுஸ் ஷெட்டி, ரவி, இரண்டாவது போட்டியில் தோற்று வெளியேறினர்.
