தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆசிய பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆசிய பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி * ஆசிய பாட்மின்டனில்


ADDED : ஏப் 07, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிங்போ: ஆசிய பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் துருவ்-தனிஷா ஜோடி முன்னேறியது.

சீனாவின் நிங்போ நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, தாய்லாந்தின் புவனாத், பென்யபா ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை 21-14 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 11-21 என இழந்தது. பின் சுதாரித்த இந்திய ஜோடி, 3வது செட்டை 21-15 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி, 21-14, 11-21, 21-15 என வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி, மலேசியாவின் சியன் லிம், தியன் வாங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 16-21, 15-21 என தோல்வியடைந்தது.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி, மலேசியாவின் ஷெவான் ஜெமி, சூன் ஹுவாத் ஜோடியிடம் 13-21, 19-21 என வீழ்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us