தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் லக்சயா, பிரனாய் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் லக்சயா, பிரனாய் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...

இரண்டாவது சுற்றில் லக்சயா, பிரனாய் * ஆஸி., ஓபன் பாட்மின்டனில்...


ADDED : நவ 19, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2025 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா, பிரனாய் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், தைவானின் லீ யங் சூவை சந்தித்தார். இதில் லக்சயா 21-17, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய், இந்தோனேஷியாவின் யோகானெசை எதிர்கொண்டார். இதில் பிரனாய், 6-21, 21-12, 21-17 என போராடி வெற்றி பெற்றார்.

இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, 21-13, 17-21, 21-19 என்ற கணக்கில், டென்மார்க்கின் ஜோஹன்னெசனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஆயுஷ், 21-11, 21-15 என்ற நேர் செட்டில் கனடாவின் யுவான் சாமை வென்றார். இந்திய 'சீனியர்' வீரர் ஸ்ரீகாந்த், 21-19, 19-21, 21-15 என தைவானின் சியா லீயை வீழ்த்தினார். இந்தியாவின் கிரண், 21-11, 22-24, 17-21 என ஜப்பானின் நிஷிமோட்டோவிடம் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us