தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/கடின பிரிவில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...

கடின பிரிவில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...

கடின பிரிவில் இந்திய ஜோடி * பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்சில்...


ADDED : டிச 13, 2025 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சீனாவின் ஹாங்சு நகரில், பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் வரும் 17-21ல் நடக்க உள்ளது. 2025ம் ஆண்டில் விளையாடிய பல்வேறு தொடர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, உலகத் தரவரிசையில் 'டாப்-8' இடம் பிடித்த ஆண்கள் இரட்டையர் ஜோடி பங்கேற்கின்றன. உலகின் 'நம்பர்-3' ஆக உள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, இதில் களமிறங்குகிறது.

நடப்பு ஆண்டில் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை என்ற போதும், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், ஹாங்காங், சீன மாஸ்டர்ஸ் தொடரில் 2 வது இடம் பிடித்தது. தவிர, மலேசியா ஓபன், இந்தியன் ஓபன் உட்பட 5 தொடர்களில் அரையிறுதிக்குள் நுழைந்தது.

தற்போது வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் 'குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் 'பி' பிரிவில் இந்திய ஜோடி இடம் பெற்றுள்ளது. தவிர, ஓலிம்பிக் பதக்கம் வென்ற, மலேசியாவின் ஆரோன் சியா, சோ இக் (2 வது இடம்), சீனாவின் லியாங் வெய், வாங் சங் (6), இந்தோனேஷியாவின் பஜர் அல்பியான், சோகிபுல் பிக்ரி (8) அணி வலுவான ஜோடி, இந்திய ஜோடிக்கு சிக்கல் தரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us