தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்திய ஜோடி அபாரம் * பாட்மின்டன் டூர் 'பைனல்சில்'...

இந்திய ஜோடி அபாரம் * பாட்மின்டன் டூர் 'பைனல்சில்'...

இந்திய ஜோடி அபாரம் * பாட்மின்டன் டூர் 'பைனல்சில்'...


ADDED : டிச 17, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குவாங்சு: வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்ஸ் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெற்றி பெற்றது.

சீனாவின் ஹாங்சு நகரில், பாட்மின்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன.

இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்தியா சார்பில் இம்முறை ஆண்கள் இரட்டையரில், உலகத் தரவரிசையில் 'நம்பர்-3' ஆக உள்ள சாத்வித்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது.

'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய ஜோடி, நேற்று தனது முதல் போட்டியில் 6வது இடத்திலுள்ள, பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளி வென்ற சீனாவின் லியாங் வெய், வாங் சங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இந்திய ஜோடி 12-21 என மோசமாக இழந்தது. இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 18-12 என முந்தியது. பின் 19-20 என பின்தங்கியது.

அடுத்து, தொடர்ந்து 3 கேமை வசப்படுத்திய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 22-20 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட்டை இந்திய ஜோடி 21-14 என தன்வசப்படுத்தியது.

முடிவில் இந்திய ஜோடி 12-21, 22-20, 21-14 என வெற்றி பெற்றது.

முதன் முறை

வேர்ல்டு டூர் பாட்மின்டன் பைனல்சில் கடந்த 2021ல் சாத்விக், சிராக் ஜோடி பங்கேற்றது. முதல் போட்டியில் விளையாடிய போது, சாத்விக் முழங்காலில் காயம் ஏற்பட, தொடரில் இருந்து விலக நேரிட்டது. தற்போது 4 ஆண்டுக்குப் பின் இத்தொடரில் இந்திய ஜோடி களமிறங்கியது. இதில் முதல் வெற்றி பெற்ற இந்திய ஜோடி என பெருமை பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us