தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/பாட்மின்டன்: அரையிறுதியில் அஷ்மிதா

பாட்மின்டன்: அரையிறுதியில் அஷ்மிதா

பாட்மின்டன்: அரையிறுதியில் அஷ்மிதா


ADDED : ஜூன் 19, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 11:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்காவ்: மக்காவ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா முன்னேறினார்.

சீனாவில், மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா தென் கொரியாவின் கிம் மின்-சனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை அஷ்மிதா 21-16 என கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 21-18 என வசப்படுத்தினார். 37 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அஷ்மிதா 21-16, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அன்மோல் கார்ப், 4ம் நிலை வீராங்கனை, சீனாவின் குயான் ஜியை சந்தித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இப்போட்டியில் அன்மோல், 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us